Friday, October 11, 2013

சேலம் மாவட்டத்தின் வரலாறு"!





தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம்

மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம்

நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம்.  மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா

என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில்

நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.

இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் 'சாலிய

சேரமண்டலம்' எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின்

கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக

கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது
நகரின் மைய பகுதியாக உள்ளது.

சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.



0 comments:

Post a Comment