Thursday, September 5, 2013

சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா?


iss_1011_600x450

நாசாவின் புதிய முயற்சி..

சர்வதேச விண்வெளி நிலையத்தை இரவுப்பொழுதில் நாம் இருந்த இடத்தில் இருந்து வெறுங் கண்ணால் இனிமேல் பார்க்க நாசா குறுஞ்செய்தி (SMS) சேவை ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பூமி மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் விண்ணில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது International Space Station (ISS).


அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள், ஆய்வுக் கருவிகள், உணவுகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண் ஓடங்கள் அவ்வப்போது விண்ணுக்குச் சுமந்து சென்று வருகின்றன.
தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் ISS ஐ இயக்கி வருகின்றார்.

இந்த ISS செயற்கைக் கோளை இரவு வானில் தொலைக் காட்டி இன்றி எவரும் வெறுங் கண்ணால் ஒரு நட்சத்திரம் விண்ணில் குறுக்கே மிக வேகமாக செல்வது போல் அவதானிக்கலாம்.

தமது இடத்திலிருந்து வானின் எத்திசையில் சரியாக எத்தனை மணிக்கு இது வானில் செல்லும் என்பதை அறிவதற்கு நாசா சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய SMS சேவைக்கு அதாவது நாசாவின் இணையத் தளமான http://spotthestation.nasa.gov/ இல் தமது பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரியை இவர்கள் பதிவு செய்தால் போதும். ISS தென்படும் நேரம் மற்றும் இடம் SMS மூலம் தெரிவிக்கப்படும்.

வானியலில் ஆர்வமுடையவர் எவரும் ISS ஐ வெறுங் கண்ணால் பார்ப்பதற்கு இதன் மூலம் உடனடியாக முயற்சி செய்ய முடியும்.

ஆகவே நீங்களும் உங்கள் வீட்டருகே ISS ஐ அவதானித்து அதைப் பிறருக்கும் எடுத்துரையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கும் விண்வெளித் துறையில் ஆர்வம் அதிகரிக்கலாம்.

0 comments:

Post a Comment